Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா

By: vaithegi Fri, 27 Jan 2023 10:14:32 AM

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா

பழனி :முருகனின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையடுத்து குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இன்று பழனி கோவிலுக்கு 3 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடமுழுக்கு விழாவுக்கான பூஜைகள் கடந்த 18ஆம் தேதி தொடங்கிய நிலையில் 23-ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. குடமுழுக்கு விழாவை காண முன்பதிவு செய்த 51 ஆயிரம் பக்தர்களில் 6000 பேருக்கு மட்டுமே மலைக் கோயிலில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற பக்தர்கள் விழாவை காண வசதியாக மலையடிவாரம் தொடங்கி பேருந்து நிலையம் வரை 16 இடங்களில் பெரிய எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளது.

kudamukku,palani thandayuthapani swami,devotees ,குடமுழுக்கு ,பழனி தண்டாயுதபாணி சுவாமி,பக்தர்கள்

இதனை அடுத்து 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் , ஓதுவார்கள் , திருமுறை திருப்புகழ் பாட காலை 8 மணிக்கு கோயிலின் ராஜகோபுரம், தங்க விமானம் போன்றவற்றிற்கு புண்ணிய நதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

ஹெலிகாப்டர் மூலம் அப்போது கோயில் கலசங்கள் மற்றும் கோபுரங்களுக்கு மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . மேலும் அத்துடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கவும் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருகை புரிந்துள்ளார்.

Tags :