Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • வேங்கராயன்குடிகாடு வில்லாயி அம்மன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பின் பெருந்திருவிழா தொடக்கம்

வேங்கராயன்குடிகாடு வில்லாயி அம்மன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பின் பெருந்திருவிழா தொடக்கம்

By: Nagaraj Fri, 24 Mar 2023 8:18:11 PM

வேங்கராயன்குடிகாடு வில்லாயி அம்மன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பின் பெருந்திருவிழா தொடக்கம்

தஞ்சாவூர்: 16 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சாவூர் அருகே காசவளநாடு வேங்கராயன்குடிகாடு கிராமத்தில் உள்ள வில்லாயி அம்மன் கோயிலில் பெருந்திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.

தஞ்சை அருகே வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் கிராம தெய்வமாக அருள்பாலிக்கும் வில்லாயி அம்மன் கோயிலில் கடந்த 2007ம் ஆண்டு பெருந்திருவிழா நடைபெற்றது. அதற்கு பிறகு 16 ஆண்டுகள் கழித்து நடப்பாண்டு வரும் மே மாதம் 19-ம் தேதி பெருந்திருவிழா நடக்க உள்ளது. அன்றைய தினம் வில்லாயி அம்மன் வீடு, வீடாக வீதியுலாக சென்று தேங்காய் உடைத்தலும், மறுநாள் மே 20 -ம் தேதி வீடுகள் தோறும் ஆடு கிடா வெட்டுதலும், 22 ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்க உள்ளது.

utsavam,villayi amman,perundruvizha,villagers ,உற்சவம், வில்லாயி அம்மன், பெருந்திருவிழா, கிராம மக்கள்

இந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை வில்லாயி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. பின்னர் அம்மனை சன்னதியிலிருந்து கொண்டுவந்து மண்டபத்தில் ஊஞ்சலில் வைக்கப்பட்டது.

தொடர்ந்து அம்மனுக்கு தேங்காய், பழம், இனிப்புகள் வைத்து மகாதீபாரதனையும், தொடர்ந்து காப்பு கட்டுதலும் நடந்தது. இதில் காசவளநாட்டைச் சேர்ந்த 18 கிராமங்களின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

பெருந்திருவிழா முடியும் வரை காலை, மாலை சிறப்பு பூஜைகளுடன் வில்லாயி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Tags :