Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • வைகாசி மாதம் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல அனுமதி

வைகாசி மாதம் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல அனுமதி

By: vaithegi Wed, 17 May 2023 3:50:39 PM

வைகாசி மாதம் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல  அனுமதி

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். ஒவ்வொரு மாதமும் இக்கோயிலில் பிரதோ‌ஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையடுத்து அதன்படி அந்நாட்களில் மட்டுமே பக்தர்களும் மலையேறவும், கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள்.

அந்தவகையில், வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சதுரகிரி மலை இந்த கோவிலுக்கு மலையேறி சாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

chaturagiri,vaikasi month pradosham,amavasai ,சதுரகிரி,வைகாசி மாதம் பிரதோஷம் ,அமாவாசை

தற்போது கோடை காலம் என்பதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்லக்கூடாது என்றும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மலை ஏறக்கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.

மேலும் அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்படும் எனவும் வனத்துறை அறிவித்து உள்ளது. அமாவாசை சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து கொண்டு வருகின்றனர்.

Tags :