Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

By: Nagaraj Sat, 08 July 2023 4:51:38 PM

மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

புதுடில்லி: அமர்நாத் யாத்திரை நிறுத்தம்... மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை இரண்டாவது நாளாக இன்றும் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக காஷ்மீரில் உள்ள பஹல்காம் மற்றும் பால்டால் வழித்தடங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. மக்களின் பாதுகாப்பு கருதி அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக இரண்டாவது நாளாக இன்றும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி நிவாஸிலிருந்து பள்ளத்தாக்கு நோக்கி எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. ரம்பான் மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

passengers,pilgrimage,stopover,weather,camps ,பயணிகள், யாத்திரை, நிறுத்தம், வானிலை, முகாம்கள்

யாத்திரைக்கு வந்துள்ள பயணிகள் அனைவரும் வெவ்வேறு முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 1-ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் இதுவரை 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 62 நாள்கள் புத்த பூர்ணிமா திருவிழாவுடன் நிறைவடைகிறது.

Tags :