Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • போராட்ட களங்கள் பல கண்டு கொண்ட கொள்கையில் உறுதியாக நின்ற பேரறிஞர் அண்ணா

போராட்ட களங்கள் பல கண்டு கொண்ட கொள்கையில் உறுதியாக நின்ற பேரறிஞர் அண்ணா

By: Nagaraj Fri, 15 Sept 2023 6:14:31 PM

போராட்ட களங்கள் பல கண்டு கொண்ட கொள்கையில் உறுதியாக நின்ற பேரறிஞர் அண்ணா

சென்னை: இன்று மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் ொண்டாடப்படுகிறது. எடுத்த கொள்கையில் உறுதியுடன் திகழ்ந்தவர் பேரறிஞர் அண்ணாதுரை.

1928-ல் மோதிலால் நேரு அதிகாரப்பூர்வ மொழியாக பயன்படுத்த ஹிந்தியை பரிந்துரைத்த போது, தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளும் ஹிந்தி வட இந்தியர்கள் முக்கிய மொழியாக இருப்பதால் மற்ற மொழிமக்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட வேண்டும் என்று கருதி கடுமையாக எதிர்த்தார்கள். இதன் தொடக்கமாக காங்கிரஸ் கட்சி 1938-ல் மதராஸ் மாகாணத்தில் சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் அனைத்து பள்ளிகளிளும் கட்டாய மொழியாக இந்தி பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் இதை விரும்பாத அண்ணா, பாரதிதாசன், தமிழ் ஆன்றோர்கள், புலவர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தமிழ் பற்றாளர்களும் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இது மிகபெரிய போராட்டமாக வெடித்தது மட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் நடராஜன் என்பவர் தமிழுக்காக உயிரையும் தியாகம் செய்தார். அவரின் இறப்பு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் ஒரு முக்கிய தூண்டுகோலாகவும் இருந்தது. இதன் விளைவாக பிப்ரவரி 1938 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணாதுரை, பாரதிதாசன் உட்பட பல தமிழறிஞர்கள் கலந்துகொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிபடுத்தினர்.

bilingual policy,ph.d.,anna,anti-hindi,struggle ,இருமொழி கொள்கை, முனைவர், அண்ணா, இந்தி எதிர்ப்பு, போராட்டம்

1950 இல், இந்தியா ஒரு குடியரசு நாடாக மாறிய போது, இந்தியை இந்தியாவின் அலுவலக ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் நடைமுறைபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.

இதனால் 1960-ல் திமுக கட்சி அண்ணாவின் தலைமையில் கட்டாய இந்தி மொழி திணிப்பை எதிர்த்து சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் “இந்தி எதிர்ப்பு மாநாடு” நடத்தப்பட்டது. பிறகு இந்திய குடியரசு தலைவர் வருகையின் பொழுது கருப்புக்கொடி காட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை கண்ட இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தி பேசா மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும் வண்ணம் இந்திய அரசியல் அமைப்பில் சட்ட திருத்தம் நிறைவேற்றினார்.

அதன் பிறகு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அண்ணா வெற்றி பெற ஓர் முக்கிய காரணமாகவும் அமைந்தது. 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஒன்பது மாநிலங்களில் தி.மு.க வெற்றிபெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சி சென்னையில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 1967 பிப்ரவரியில் சென்னை மாநில அமைச்சர் ஆனார் அண்ணா. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை “தமிழ் நாடு” என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அது மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் நிலவும் மூன்று மொழி திட்டத்துக்கு எதிராக தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையை அமல்படுத்தினார்.

பின்னர் ஜனவரி 3, 1968 ஆம் அண்டு “இரண்டாம் உலக தமிழ் மாநாடு” நடத்தப்பட்டது. ஏப்ரல்-மே 1968 இல் யேல் என்ற அமெரிக்க பல்கலைக்கழகம் இவருக்கு “சுபப் பெல்லோஷிப்” என்ற விருதை வழங்கி கௌரவித்தது. இந்த விருதை பெற்ற அமெரிக்க அல்லாத ஒரு இந்தியர் என்ற பெருமையை தேடித்தந்தது. பின்னர் அதே ஆண்டில், அவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மூலமாக கெளரவ முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது.

Tags :
|
|