Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதியில் வருகிற 27ம் தேதியிலிருந்து அக்டோபர் மாதம் 5ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா

திருப்பதியில் வருகிற 27ம் தேதியிலிருந்து அக்டோபர் மாதம் 5ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா

By: vaithegi Mon, 05 Sept 2022 4:15:44 PM

திருப்பதியில்  வருகிற 27ம் தேதியிலிருந்து அக்டோபர் மாதம் 5ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா

திருப்பதி: திருப்பதியில் வருகிற 27ம் தேதி அன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா வருகிற 27ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவின் 5வது நாள் கருடசேவை நடைபெற உள்ளது.

இதை அடுத்து இந்த விழாவின் போது உற்சவர் மலையப்ப சுவாமிக்கு குடை அலங்காரம் வெகு சிறப்பாக செய்யப்படும். ஒரு இந்து அமைப்பு உற்சவர் மலையப்பசாமிக்கு சமர்ப்பிப்பதற்காக பிரத்யேக குடைகளுடன் சென்னையில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக திருமலையை நோக்கி வருவார்கள்.

tirupati,brahmotsava festival ,திருப்பதி, பிரம்மோற்சவ விழா

இதனைத்தொடர்ந்து இந்த குடை ஊர்வலத்தின்போது பக்தர்கள் யாரும் காணிக்கை போடக்கூடாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏனெனில் குடை ஊர்வலத்தின்போது பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கைகள் முழுவதுமாக திருமலை- திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்றவடைதில்லை என தெரிவித்துள்ளது.

மேலும் ஊர்வலத்தில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளுக்கும், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்றும் அதனால் பக்தர்கள் தங்களின் காணிக்கையை கோவிலுக்கு வந்து செலுத்துபடி கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :