Advertisement

கோவிலில் நாம் அனைவரும்.... செய்யக் கூடாதவை

By: vaithegi Thu, 11 Aug 2022 8:53:07 PM

கோவிலில்  நாம் அனைவரும்.... செய்யக் கூடாதவை

கோவிலில் அவசர அவசரமாகவோ, கோபமாகவோ பூஜை செய்வதோ, ஆலயம் செல்வதோ கூடாது. அது மட்டும் இல்லாமல் காலை சுத்தம் செய்யாமல் கோவிலுக்குச் செல்லக் கூடாது. கோவிலுக்குள் வலம் வரும்போது வேக வேகமாக வலம் வரக்கூடாது. நிறைமாத கர்ப்பிணிப் பெண் தலையில் எண்ணெய் குடத்துடன் நடந்தால் எப்படி நடப்பாளோ அப்படியே நடக்க வேண்டும்.

மேலும் மூர்த்திகளைத் தொடுவதோ அல்லது மூர்த்திகளின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவதோ கூடாது. கோவிலில் உள்ள திருவிளக்குகளைக் கையால் தூண்டவோ, தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது. இறைவனுக்கு நைவேத்தியம் ஆகும்போது பார்க்கக் கூடாது. விபூதி, சந்தனம், அபிஷேகம் தவிர சாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்கக் கூடாது. சாமிக்கும் நந்திக்கும் குறுக்கே போகுதல் , சிவ நிர்மால்யங்களைத் தூண்டுதல், மிதித்தல் கூடாது.

temple,worship ,கோவிலில்,வழிபாடு

அதே சமயம் ஸ்தூபி, கொடிமரம், பலிபீடம், விக்கிரகம் ஆகியவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது. மேலும் பிறர் வீட்டில் அன்னம் புசித்த அன்று கோவிலுக்குச் செல்வது தவறு. கோவிலுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு கொண்டு செல்ல வேண்டும். பிறர் பொருளைக் கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்து படைக்க கூடாது.

வீட்டில் தினமும் செய்யும் வழிபாட்டை செய்யாமல் நிறுத்தி விட்டு கோவிலுக்குச் செல்லக்கூடாது. மரணத்தீட்டு உள்ளவர்களையோ தீட்டு உள்ளவர்களோ அல்லது அத்தீட்டு உடையவரைத் தொட்டபின் குளிக்காமலோ கோவிலுக்குச் செல்லக் கூடாது. கருப்பு வண்ண உடை அணிந்து கோவிலுக்குச் செல்லக்கூடாது. எனவே இந்த வழிமுறைகளை பின்பற்றி கோவிலில் சாமி தரிசனம் செய்து பலன் பெறலாம்

Tags :
|