Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல தடை விதிப்பு

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல தடை விதிப்பு

By: vaithegi Wed, 19 July 2023 10:26:58 AM

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல தடை விதிப்பு

சென்னை: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்து உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்று.

இதையடுத்து இச்சூழலில் சதுரகிரி மலைப்பகுதியில் நாவல் ஊத்து பகுதியில் நேற்று முன்தினம் காட்டுத்தீ பல்வேறு பகுதிகளுக்கும் பரவி எரிந்து கொண்டு வருகிறது. ஆடி மாத பிறப்பு மற்றும் அமாவாசை தினத்தை ஒட்டி 10,000 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று முன்தினம் வருகை தந்த நிலையில் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மலைப்பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

chaturagiri sundara mahalingam,devotees ,சதுரகிரி சுந்தர மகாலிங்கம் ,பக்தர்கள்

மேலும் அத்துடன் தீயை அணைக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர்: சதுரகிரி வனப்பகுதியில் நேற்று முன்தினம் பற்றி எரியத் தொடங்கிய காட்டுத்தீ, இன்று ஓரளவு கட்டுப்பாட்டில் வந்து உள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. அந்த பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் சிக்கல் நீடித்தது.

Tags :