Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பு

சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பு

By: Nagaraj Fri, 03 Feb 2023 10:24:22 AM

சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பு

விருதுநகர்: பக்தர்கள் செல்ல தடை விதிப்பு... ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி கோவிலுக்கு இன்று மற்றும் நாளை பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. தைப்பூசத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பிரதோஷம் மற்றும் பெளர்ணமியை முன்னிட்டு பிப்ரவரி 3, 4 ஆகிய தேதிகளில் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

தைப்பூச திருவிழாவையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தை மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 6 வரை பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

chaturagiri,devotees,prohibition ,சதுரகிரி, தடை, பக்தர்கள்

அனுமதிக்கப்பட்ட நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகத்தின் நிபந்தனைகளை பக்தர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மழை பெய்தால் பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் பிப்ரவரி 3ம் தேதி மற்றும் நாளை மறுநாள் 4ம் தேதி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மலையேற வனத்துறை தடை விதித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பக்தர்கள் யாரும் மலை அடிவாரத்திற்கு வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசனம் செய்ய மலை ஏற வேண்டும் என நினைத்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

Tags :