Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருமணம் தடைபடுபவர்கள் துர்க்கை விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்

திருமணம் தடைபடுபவர்கள் துர்க்கை விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்

By: Nagaraj Sat, 22 July 2023 08:05:34 AM

திருமணம் தடைபடுபவர்கள் துர்க்கை விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்

சென்னை: திருமணம் தடைபடுபவர்கள் துர்க்கையை விரதம் வழிபாடு செய்தால் போதுமானது. ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஞாயிறு : ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30 முதல் – 6 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.

திங்கள்: திங்கள்கிழமைகளில் காலை 7.30 – முதல் 9 மணிக்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும்.

செவ்வாய்: ராகு கால நேரமான மாலை 3 மணி முதல் – 4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

durga fast,marriage,hindrance removed,unending suffering,grief ,துர்க்கை விரதம், திருமணம், தடை நீங்கும், தீராத துன்பம், துயர்

புதன்: மதியம் 12 முதல் 1.30 மணிக்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பது, ரத்த சம்பந்தமான நோய் தீரும்

வியாழன்: வியாழக்கிழமைகளில் மதியம் 1.30 முதல் – 3 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும்

வெள்ளி: வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து ராகுகால நேரமான காலை 10.30 முதல் – 12 மணிக்குள் துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் .

Tags :