Advertisement

சோமவார விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

By: Nagaraj Mon, 13 June 2022 9:56:40 PM

சோமவார விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: சோம வாரம் விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுங்களா. சோமசுந்தர கடவுள் என்பது சிவனை குறிப்பது. சோமன் என்ற சொல்லுக்கு பார்வதியோடு இணைந்த சிவபெருமான் என்ற பொருளும் உண்டு.

திங்கட்கிழமையை சோம வாரம் எனக் கூறுவார்கள். திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். திங்கட்கிழமை கடைபிடிக்கும் விரதம் சோமவார விரதம் என அழைக்கப்படுகிறது. திங்கட்கிழமையில் பிரதோஷமும் வருமானால், அது மிகவும் விசேஷமான சோமவார விரதமாக அமையும். பிரதோஷ காலம் சிவனுக்கு மிகவும் உகந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

வாழ்வில் சகல கஷ்டங்களும் நீங்க சோமவார விரதமிருந்தால் போதும். சிவனை மகிழ்விக்க சிவ ஸ்தோத்திரங்கள் சொல்லலாம். சிலர் நாள் முழுவதும் எந்த உணவு ஏதும் எடுத்துக்கொள்ளாமல் விரதம் இருப்பார்கள். ஆனால், முடியாதவர்கள் அப்படி வருத்திக் கொள்ள வேண்டும் என்பதல்ல. அவரவர் உடல் நலத்துக்கு ஏற்றார்போல எளிமையான சைவ உணவை ஒருவேளைக்கு மட்டும் எடுத்துக்கொள்ளலாம். அல்லது பழங்களையும் சாப்பிடலாம்.

devotion,lord shiva,monday,fasting,separation,greatness ,பயபக்தி, சிவபெருமான், சோமவாரம், விரதம், பிரிந்தவர்கள், மகத்துவம்

விரத நாள் அன்று சிவ பூஜை செய்து, சிவாஷ்டகம், சிவ அஷ்டோத்திரம் போன்ற உங்கள் தெரிந்தவற்றை சொல்லி மனதார சிவனை தியானித்து விரதமிருந்தால், உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.

வீடுகளில் சிவபூஜை செய்து பழக்கமில்லை எனில், அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்று அங்கே பஞ்சாமிர்த அபிஷேகம், பாலாபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்து, உங்களால் இயன்ற பிரசாதத்தை செய்து விநியோகிக்கலாம்.

மேலே கூறிய எதுவும் முடியவில்லை என்றால், உங்களுக்கு எந்த ஸ்தோத்திரமும் தெரியவில்லை என்றாலும் கவலை இல்லை. 'ஓம் நமசிவாய' என்ற பஞ்சாட்சர மந்திரத்தை மட்டும் சொன்னால் போது. உங்களால் முடிந்தால், காலையில் அல்லது மாலையில் சிவன் கோயிலுக்குச் சென்று வரலாம்.

பிரிந்த குடும்பம் ஒன்று சேர வேண்டும் என விரும்புபவர்கள், திங்கட்கிழமையன்று பயபக்தியுடன் சிவபெருமானை நினைத்து இந்த சோமவார விரதத்தை கடைப்பிடித்து வந்தால், பிரிந்தவர்கள் எங்கிருந்தாலும் உங்களை தேடி வருவார்கள். இந்த விரதம் அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்தது.

Tags :
|