Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • ஆடி செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

ஆடி செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

By: Nagaraj Sat, 22 July 2023 08:05:57 AM

ஆடி செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் என்பதால் அம்மனின் சக்தி இருமடங்காக இருக்கும். ஆடி மாதங்களில் வெள்ளிக்கிழமைகள் மட்டுமல்ல, செவ்வாய் கிழமைகளும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆடிமாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து சிவப்பு நிற ஆடையணிந்து வீட்டு பூஜையறையில் விளக்கேற்றி வாசனை மலர்கள், செந்நிற மலர் அல்லது செண்பக மலர்கள் சாற்றி தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு படைத்து அம்பாளை வழிபட்டு, மங்கல கவுரி விரதம் கடைப்பிடிப்பது விசேஷ பலன்களை தரும்.

tribulations will be resolved,marriage will take place,debts will be settled,adi mars ,இன்னல்கள், தீரும், திருமணம் நடைபெறும், கடன்கள் தீரும், ஆடி செவ்வாய்

மிகக் குறிப்பாக காலை 8-9 மணி வரையான சுக்கிர ஓரை மற்றும் மதியம் 3 – 4.30 வரையான ராகு வேளையில் வழிபட வேண்டும். இயன்றவர்கள் அன்னதானம் மற்றும் சிகப்பு துவரை தானம் செய்யலாம்.

சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் குங்குமம், வெற்றிலை பாக்கு, பழம் கொடுக்க வேண்டும். இதனால் ஜாதகத்திலுள்ள செவ்வாய் தோஷம் நீங்கும்.

திருமணம் நடைபெறும். புத்திர பாக்கியம் உண்டாகும். கடன்கள் தீரும். ஆரோக்கியம் மேம்படும். ரத்த சம்பந்தமான பதினாறு பேறும் கிட்டும். ஜனன கால ஜாதகத்தில் செவ்வாய் ராகு/கேது சம்பந்தத்தால் ஏற்படும் இன்னல்கள் தீரும்.

Tags :