Advertisement

திருப்பதியில் இன்றுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு

By: vaithegi Tue, 26 Sept 2023 11:32:51 AM

திருப்பதியில் இன்றுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு


திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 18-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், சுவாமிக்கு பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார். இதைத் தொடர்ந்து தினமும் பகல் மற்றும் இரவு என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இந்த நிலையில், 8-ம் நாளான நேற்று காலை 6.55 மணிக்கு தேர் பவனி தொடங்கியது. இதில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் பவனி வந்தார். மாட வீதிகளில் கூடியிருந்த பக்தர்கள் தேர் திருவிழாவை கண்டு ரசித்தனர். பலர் மிளகு, உப்பு ஆகியவற்றை தேரின் மீது வீசி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

brahmotsava festival,tirupati , பிரம்மோற்சவ விழா,திருப்பதி

இதனை அடுத்து சுமார் 2 மணி நேரம் வரை தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரவில் குதிரை வாகனத்தில் கல்கி அலங்காரத்தில் மலையப்பரின் வாகன சேவை நடைபெற்றது. இதுவே இந்த பிரம்மோற்சவ விழாவின் கடைசி வாகன சேவை.

பிரம்மோற்சவ விழாவின் இறுதி கட்டமாக இன்று காலையில் கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் சக்கர ஸ்நான புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எனவே இதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று மாலை கொடி இறக்க நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. அடுத்த மாதம் 15-ம் தேதி முதல் 23-ம்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது.

Tags :