Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள்

By: vaithegi Wed, 09 Nov 2022 4:02:57 PM

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள்

திருச்செந்தூர் : பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் ... திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சில கட்டுப்பாடுகளை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது. எனவே அதன் படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் வரும் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இது குறித்து திருச்செந்தூரை சேர்ந்த சீதாராமன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. மேலும் இது குறித்தி நீதிபதிகள் R.மகாதேவன், J.சத்தியநாராயணா பிரசாத் அமர்வு வழங்கிய தீர்ப்பில், வழிபாட்டுக்காக இருக்கும் கோவில்கள் என்ன சத்திரமா? கோவில்கள் பொழுது போக்கும் சுற்றுலா தலம் அல்ல என்று கூறியுள்ளனர்.

tiruchendur,temples ,திருச்செந்தூர் ,கோவில்கள்

மேலும் கோவில்களுக்கு வரும் பக்தர்கள், டவுசர், அரைகால் சட்டை, ஜீன்ஸ் பேன்ட், உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வருவது வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ளனர். மேலும் ஆந்திராவில் திருப்பதி கோயில் வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது.

ஆனால் தமிழகத்தில் சாமி சிலை முன் செல்பி எடுக்கும் நிலை இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீர்ப்பு குறித்து ஒரு வாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை வெளியுட வேண்டும் என உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags :