Advertisement

திருப்பதி ... தரிசன டிக்கெட் வழங்குவதில் மாற்றம்

By: vaithegi Fri, 03 Mar 2023 3:47:19 PM

திருப்பதி     ... தரிசன டிக்கெட் வழங்குவதில் மாற்றம்

திருப்பதி : செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, ”300 ரூபாய் தரிசன டிக்கெட், கட்டண சேவை டிக்கெட், மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் முன்னுரிமை அடிப்படையில் ஆன தரிசன டிக்கெட் உட்பட ஏழுமலையானை தரிசிப்பதற்கு உரிய அனைத்து டிக்கெட்டுகளையும் இனிமேல் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும்” என்றார்.

அதைத் தொடர்ந்து பேசியவர்,” ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பக்தர்கள் இனிமேல் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்த இயலாது.

மேலும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரை ஆக செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திவ்ய தரிசன டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளது. அதை மீண்டும் விரைவில் துவங்க தேவையான ஏற்பாடுகள் நடைபெற்ற கொண்டு வருகின்றன” என்றார்.

darshan ticket,tirupati ,தரிசன டிக்கெட் ,திருப்பதி

இதையடுத்து, 300 ரூபாய் தரிசன டிக்கெட், இலவச தரிசன டோக்கன் ஆகியவை உள்ளிட்ட ஏதாவது ஒரு தரிசன டிக்கெட்டை வாங்கி இருக்கும் பக்தர்களும் நடந்து மலையேறும் போது அங்கு வழங்கப்படும் தரிசன டோக்கனையும் வாங்கி வருகின்றனர்.

இதனால் 1 பக்தர் ஒரே நாளில் 2 வகையான தரிசன வாய்ப்புகளை பெறுகிறார். நிர்வாக அளவில் இதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. எனவே இதனை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின் திவ்ய தரிசன டோக்கன்கள் பக்தர்களுக்கு மீண்டும் வழங்கப்படும்” என அவர் கூறினார்.

Tags :