Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலில் பூஜை நேரங்கள் மாற்றம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலில் பூஜை நேரங்கள் மாற்றம்

By: vaithegi Wed, 14 Dec 2022 5:46:59 PM

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலில் பூஜை நேரங்கள் மாற்றம்


திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் மாதம் மார்கழி மாதத்தை முன்னிட்டு பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. இதனை அடுத்து இது பற்றி கோவில் இணை ஆணையர் கார்த்திக் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ் மாதமான மார்கழி நாளை மறுநாள் தொடங்கி அடுத்த மாதம் ஜனவரி 14-ந் தேதி நிறைவு பெறுகிறது. இந்நாட்களில் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், காலை 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், காலை 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது.

pooja,thiruchendur ,பூஜை ,திருச்செந்தூர்

அதன் பின்னர் மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனையும், இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

மேலும் ஜனவரி 1-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஆருத்திரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 6-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அதேபோன்று தை பொங்கல் தினத்தன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|