Advertisement

பழனி முருகன் கோவிலில் இன்று தேரோட்டம்

By: vaithegi Sat, 04 Feb 2023 10:02:55 AM

பழனி முருகன் கோவிலில் இன்று தேரோட்டம்

பழனி : தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது ..... தைப்பூசம் என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர்.

இதையடுத்து தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் கொண்டாடப்படுகிறது. முருகன் தேவ தேவர்களின் சேனாதிபதி ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

thaipusam,chariot ,தைப்பூசம்,தேரோட்டம்

இந்த நிலையில் பழனி முருகன் கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கோவிலில் தைப்பூசம் 10 நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாகும். 7-ம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் வள்ளி மற்றும் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருகிறார்.

10-ம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது. தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை. பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள். பக்தர்கள் பல நாட்கள் விரதமிருந்து காவடி எடுக்கிறார்கள்.

Tags :