Advertisement

சதுரகிரி .. பக்தர்களுக்கு செல்ல அனுமதி

By: vaithegi Tue, 03 Jan 2023 1:21:26 PM

சதுரகிரி   ..   பக்தர்களுக்கு செல்ல அனுமதி

விருதுநகர் : நாளை முதல் 7ஆம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம் .... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை 4 திசைகளிலும், மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம் சதுரகிரி. இதையடுத்து இங்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.

இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என்று மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ள இக்கோயிலிலுக்கு ஏராளமான பக்தர்கள் சிரமம் பாராமல் வந்து செல்வது வழக்கம்.

chaturagiri,devotees ,சதுரகிரி   ,பக்தர்கள்

ஆனால் அதேசமயம் மழை நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இதையடுத்து இந்நிலையில்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி முன்னிட்டு நாளை முதல் 7ஆம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரோடையில் குளிப்பதற்கும், இரவில் கோயிலில் தங்குவதற்கும் அனுமதி இல்லை என்று வனத்துறை கூறியுள்ளது.

Tags :