திருவண்ணாமலையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடல்
By: vaithegi Thu, 23 Nov 2023 5:34:06 PM
திருவண்ணாமலை : கார்த்திகை மாதம் துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிய துவங்கிவிட்டனர். இதனால், மது விற்பனை தமிழகத்தில் சற்று குறைந்திருக்கிறது.
இந்த நிலையில், பவுர்ணமி தினத்தன்று வருகிற நவம்பர் 26 ம் தேதி அண்ணாமலைகோயில் உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது. எனவே இதனை காண பல லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருவர்.
இதனால், பக்தர்களின் சௌவகரியத்திற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற நவ.25 ஆம் தேதி முதல் நவ.27 ஆம் தேதி வரை என 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை கூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து இந்த உத்தரவையும் மீறி டாஸ்மாக் கடைகள் இயங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.