Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சாரங்கபாணி பெருமாளின் அழகிய தரிசனம் காண வாருங்கள் கும்பகோணத்திற்கு

சாரங்கபாணி பெருமாளின் அழகிய தரிசனம் காண வாருங்கள் கும்பகோணத்திற்கு

By: Nagaraj Mon, 26 Dec 2022 10:52:52 PM

சாரங்கபாணி பெருமாளின் அழகிய தரிசனம் காண வாருங்கள் கும்பகோணத்திற்கு

தஞ்சாவூர்: வாழ்வில் உண்டாகும் அழுத்தங்களில் இருந்து விடுபட சுற்றுலா என்பது பெரிய விடுதலையாக அமையும் என்பதில் யாருக்கும் துளியளவும் சந்தேகமே இல்லை. கும்பகோணம் சாரங்கபாணி பெருமாளின் அழகிய தரிசனம் மனதை குதூகலிக்க வைக்கும்.


வாழ்க்கையும் நம்மை சுற்றியுள்ள அழகான உலகமும் அதில் அடங்கியுள்ள வியப்புக்களும் எப்போதும் மாறாதவை. நாம் வாழும் சமூகம் எப்போதும் அதிசயங்கள் நிறைந்தவைதான். மாறும் உலகில் உலகத்தில் உள்ள புதுமைகளையும், அதிசயங்களையும் பார்த்து ரசிப்பது என்பது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றால் மிகையில்லை.

கிணற்று தவளைகளாகவும், தேங்கிய குட்டை போன்றும் இருப்பது எதற்கு. ஆற்று நீர் ஓடும் போதுதானே வாழ்வில் அமைந்துள்ள இரசனையை ரசிக்க முடியும். அட நம்மை சுற்றி இப்படியும் இடங்கள் இருக்கிறதா என்பதை உணர, தெரிந்து கொள்ள வைப்பதுதான் சுற்றுலா. மனிதர்கள் தங்களுக்கு கிடைக்கும் ஓய்வை மனதிற்கு இனிமையாக மாற்றிக் கொள்ள தாங்கள் வாழ்கின்ற சொந்த வாழ்விடங்களில் இருந்து வெளி இடங்களுக்கு அல்லது வெளி நாடுகளுக்கு சென்று அங்குள்ள இயற்கை சூழலை இரசிக்கவும் புதிய விஷயங்களை தேடி சென்று பார்ப்பதுதான் சுற்றுலா.

ஒவ்வொரு இடத்திற்கும், ஊருக்கும் ஏதாவது பெருமையும், புகழும் நிச்சயம் இருக்கிறது. அதுவும் தென்னிந்தியாவில் சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு தஞ்சை மாவட்டம்தான் முதலில் நினைவுக்கு வரும். சுற்றுலா என்பதே மனிதர்கள் தங்களை புத்துணர்வு அடைந்து கொள்ள செய்யும் ஒரு டிராவல்தானே.

இன்று மனித வாழ்க்கை வெகுவாக மாறி விட்டது. வாழ்வின் அதிகளவான காலம் பணத்தின் பின்னால் ஓட வேண்டியுள்ளது. வாழ்க்கையில் சுமைகள், சோகங்கள் என பல அழுத்தங்களோடு மனிதன் ஓடிக் கொண்டிருப்பதனால் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை விரக்தியை உண்டாக்கி விடும். இதிலிருந்து விடுபட சுற்றுலா உதவுகிறது. சுற்றுலா என்பது அனைவருக்கும் பொழுது போக்கும் இடம் என்று இல்லை. அந்தந்த ஊர்களின் பெருமைகளை நாம் உணர்ந்து கொள்ளும் சிறந்த தருணம்தான்.

kumbakonam,devotees,varumaika,thanjavur,tarunam ,கும்பகோணம், பக்தர்கள், வருமைக, தஞ்சாவூர், தருணம்

அந்த வகையில் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் சுற்றுலாவாக வந்தால் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்துவிட்டுதான் செல்வார்கள். இங்கு வீர சயனத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இப்படி உலக பெருமை வாய்ந்த ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலுக்கு பின்னர் சயன கோலத்தில் அதாவது உத்தான சயனம் என்று அழைக்கப்படும் கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கும் இடம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில்தான்.

ஆராவமுதனைக் காண கண் கோடி வேண்டும் என்பார்கள். அவரின் அழகில் சொக்கிப் போவோம். சாரங்கபாணியின் சந்நிதியில் நின்று வேண்டிக்கொண்டாலே, நம் கவலைகளும் துக்கங்களும் சடுதியில் கரைந்து காணாமல் போகும் என்கிறார்கள் பக்தர்கள்.

கோயில் நகரம் எனும் பெருமைக்கு உரியது கும்பகோணம். சைவக் கோயில்களும் ஏராளம். வைணவக் கோயில்களும் தாராளமோ தாராளம். இங்குள்ள ஆலயங்களில், மிகப்பிரமாண்டமான ஆலயமாகத் திகழ்கிறது ஸ்ரீசாரங்கபாணி கோயில்.

பெருமாளுக்கு ஸ்ரீசாரங்கபாணி. ஆராவமுதன் என்று பெயர். மூலவர் சாரங்கபாணி உத்தான சயனத்தில், கிடந்த கோலத்தில் கிழக்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறார். அதனால்தான் உத்தான சாயி என்ற பெயரும் பெருமாளுக்கு உண்டு.

கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி பெருமாள் கோயிலுக்கு திருமழிசை ஆழ்வார் வந்து தரிசித்து வழிபட்டார். அப்போது பெருமாள் சயனத்தில், தூங்கிய நிலையில் இருந்தாராம். இதைப் பார்த்துவிட்டு பதறிப் போனார் திருமழிசை ஆழ்வார். அவர் தனது பதற்றத்தை பாட்டாக பாட திருமழிசை ஆழ்வாருக்கு பதில் கூறும் விதமாகக் கிடந்த கோலத்தில் இருந்தபடியே எழுந்த கோலத்தில் காட்சி தருகிறார். இதைத்தான் உத்தான சயனம் எனப்படுகிறது என்கிறார்கள்.

கும்பகோணத்தில் இன்றைக்கும் சாரங்கபாணி கோயில் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். அவரது மற்றொரு பெயரான ஆராவமுதன் என்று அழைத்தவர் நம்மாழ்வார். ‘உண்டாலும் தெவிட்டாத அமுதுக்கு ஆரா அமுது’ என்று பெயர்க்காரணம் சொல்கிறது புராணம்.

Tags :