Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • குற்றாலநாதர் கோவில் ஐப்பசி விஷூ திருவிழா கொடியேற்றம்

குற்றாலநாதர் கோவில் ஐப்பசி விஷூ திருவிழா கொடியேற்றம்

By: Nagaraj Thu, 08 Oct 2020 09:16:28 AM

குற்றாலநாதர் கோவில் ஐப்பசி விஷூ திருவிழா கொடியேற்றம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் கோவில் ஐப்பசி விஷு திருவிழா இன்று கொடியற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி குற்றாலம் குற்றாலநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஐப்பசி விஷூ தொடங்கி உள்ளது. விழாவின் 4 ஆம் நாள் வரும் 11 ஆம் தேதியன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும் 14 ஆம் தேதியன்று நடராஜருக்கு காலை 9.30-க்கும், இரவு 7 மணிக்கும் தாண்டவ தீபாராதனை நடைபெறும்.

courtallam,flag hoisting ceremony,devotees,organized ,குற்றாலநாதர், கொடியேற்று விழா, பக்தர்கள், ஏற்பாடு

15 ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு பச்சை சாத்திதாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. 17 ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு விசு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

கொரோனா காலம் என்பதால் விழாக்கள் அனைத்தும் குற்றாலநாதர் கோவில் உள்பிரகாரத்திலேயே நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மா.கண்ணதாசன் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். கொடியேற்று விழாவில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பங்கேற்றனர்.

Tags :