Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • குலதெய்வ வழிபாடு என்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது

குலதெய்வ வழிபாடு என்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது

By: Nagaraj Sat, 22 July 2023 08:06:11 AM

குலதெய்வ வழிபாடு என்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது

சென்னை: பொதுவாக இறைவழிபாடு நல்லது. முதன்மை வழிபாடு குலதெய்வம். தினசரி நினைத்துக் கொள்வது என்பது நல்லது. ஏனென்றால் பலருக்கும் குலதெய்வம் காடு, மலை, வயல்வெளி, சாலை வசதி இல்லாத இடங்களில்தான் இருக்கிறது. அதனால் எப்போதும் சென்றுவர முடியாது. ஆனால் குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம்.

வருடம்தோறும் இரண்டு முறையாவது அவரவர்களுடைய குலதெய்வக் கோயிலிற்கு சென்று வருவது நல்லது. குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பிறக்குமா? அய்யனாருக்கு குதிரை கட்டி பலரும் ஆண் பிள்ளை பெற்றிருக்கிறார்கள். இந்த மாதிரி நடக்கின்றதா? எத்தனையோ தெய்வங்கள் இருக்கிறது. ஆனால், அதில் குலதெய்வம் என்பது மிக மிக முக்கியம்.

மதம் இருக்கிறது. மதத்தில் ஜாதி இருக்கிறது. அந்த ஜாதியிலேயே 4 பிரிவு இருக்கும். ஒவ்வொரு ஜாதியிலுமே நான்கைந்து பிரிவுகள் உண்டு. ஆனால், இந்த நான்கைந்து பிரிவுகளையுமே ஒற்றுமைப்படுத்துவதுதான் இந்தக் குலதெய்வம்.

importance,family deity,interests,concern,worship,devotees ,முக்கியத்துவம், குல தெய்வம், நலன்கள், அக்கறை, வழிபாடு, பக்தர்கள்

அடுத்து, குல தேவதா, இஷ்ட குல தேவதா என்று இரண்டு வழிபாடு உண்டு. குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதற்கு நீங்கள் சென்றே ஆகவேண்டும்.

இஷ்ட குல தேவதை என்பது, எனக்கு மிகவும் பிடிக்கும். அய்யப்பன் கோயிலுக்குப் போவது பிடிக்கிறது. எனக்கு என்னவோ அந்தப் பாட்டெல்லாம் பிடிக்கிறது. இப்படி இஷ்டத்திற்குப் போவது. இது அவரவர்கள் விருப்பத்திற்கு தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆனால் குலதெய்வம் என்பது கட்டாயம். குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது.

Tags :