Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்ய தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்ய தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு

By: Nagaraj Wed, 23 Nov 2022 6:34:02 PM

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்ய தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்ய நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தேவஸ்தானம் சார்பில் ஒவ்வொரு மாதமும் ரூ.300 தரிசன கட்டண டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்ய நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

disabled person,online ticket,tirupathi ,தரிசன டிக்கெட், திருப்பதி ஏழுமலையான், மாற்றுத்திறனாளி

தரிசனத்திற்கு வர விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டு வரவேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதிக்கு நேற்று 69,587 பேர் வருகை தந்துள்ளனர்.

28,645 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.35 கோடி பில் பங்களிப்பு வசூலிக்கப்பட்டது. கடும் குளிர் மற்றும் மழையால் திருப்பதியில் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அவதிப்பட்டனர்.

Tags :