Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சதுரகிரி மலைப்பகுதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

சதுரகிரி மலைப்பகுதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

By: vaithegi Sun, 30 July 2023 10:09:38 AM

சதுரகிரி மலைப்பகுதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

சதுரகிரி : காட்டுத்தீ காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு ... ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்து உள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில். அடிவாரப் பகுதியான தாணிப்பாறையிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு வனப்பகுதி வழியே நடந்து செல்ல வேண்டும்.

இதையடுத்து பொதுவாக இக்கோயிலுக்கு அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் என்று 8 நாட்களுக்கு மட்டுமே மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அந்தவகையில் இன்று முதல் பிரதோஷம், பௌர்ணமியையொட்டி 4 நாட்கள் சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

chaturagiri,forest fire,pratosham ,சதுரகிரி ,காட்டுத்தீ ,பிரதோஷம்

ஆனால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்து உள்ள சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பீட் எண் 5 ஊஞ்சக்கல் என்ற பகுதியில் மீண்டும் கடந்த 2 நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து கொண்டு வருகிறது. வனப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அருகில் உள்ள 6-வது பீட்டிற்கும் தீ பரவி கொண்டு வருகிறது. இருந்த போதும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

எனவே இந்த காட்டுத்தீ காரணமாக பிரதோஷத்தையொட்டி இன்று பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி மறுத்து உள்ளனர். மேலும் சுமார் 500 பக்தர்கள் அடிவாரப்பகுதியில் காத்திருக்கும் நிலையில், மீதமுள்ள நாட்களுக்கான அனுமதி பற்றி இன்று அறிவிக்கப்படும் என்று வனத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

Tags :