Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதியில் தற்போது பக்தர்களின் கூட்டம் சற்று குறைந்துள்ளது .. தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதியில் தற்போது பக்தர்களின் கூட்டம் சற்று குறைந்துள்ளது .. தேவஸ்தானம் அறிவிப்பு

By: vaithegi Thu, 22 June 2023 1:23:46 PM

திருப்பதியில் தற்போது பக்தர்களின் கூட்டம் சற்று குறைந்துள்ளது ..  தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: பக்தர்கள் சில மணி நேரத்திலேயே சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வதாகவும் தேவஸ்தானம் அறிவிப்பு ...... உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

அதிலும், கடந்த மாதங்கள் வரைக்கும் கோடை விடுமுறை என்பதனால் குழந்தைகளுடன் குடும்பத்துடன் வந்து ஏழுமலையானை தரிசித்து சென்றனர். மேலும், கடுமையான வெயில் மற்றும் மழையையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரங்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வந்தனர்.

devasthanam,tirupati ,தேவஸ்தானம் ,திருப்பதி


இந்த நிலையில், நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அலைமோதி கொண்டிருப்பதால் வார இறுதி நாட்களில் மட்டும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டது.எனினும் , பக்தர்களின் எண்ணிக்கை சற்றும் குறையாமல் நாளுக்கு நாள் உயர்ந்த படி கிட்டத்தட்ட 4 முதல் 5 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

ஆனால் தற்போது திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் சற்று குறைந்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது. இதற்கு முன்பெல்லாம் 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வந்த நிலையில் தற்போது 12 மணி நேரத்திலேயே சாமி தரிசனம் செய்வதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து இருக்கிறது.

Tags :