Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியலை மாற்ற தேவஸ்தான அதிகாரிகள் முடிவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியலை மாற்ற தேவஸ்தான அதிகாரிகள் முடிவு

By: vaithegi Mon, 31 July 2023 09:39:52 AM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியலை மாற்ற தேவஸ்தான அதிகாரிகள் முடிவு

திருப்பதி : கோயிலில் ஸ்டீல் உண்டிகளை வைக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு ... திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி கொண்டு வருகின்றனர். இதற்காக பல நூற்றுண்டுகளாக கங்காளம் எனப்படும் பெரிய பித்தளை அண்டாவில் வெள்ளை துணிக்கு மத்தியில் வைத்து கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து வெளியே வந்தவுடன் காணிக்கை செலுத்தும் விதமாக வைக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து இதன் மூலம் தினந்தோறும் 12 முதல் 15 ஆண்டா நிரம்பி 1 நாளைக்கு ரூ.4 முதல் 5 கோடிக்கு மேல் காணிக்கை வருகிறது. இதில் ஒரு சிலர் உண்டியலில் பக்தர்கள் பணம் செலுத்தும் போது திருடிய சம்பவமும் நடந்து உள்ளது.

officials of tirupati eyumalayan temple,devasthanam ,திருப்பதி ஏழுமலையான் கோயில்,தேவஸ்தான அதிகாரிகள்

மேலும் இந்த அண்டாவை கோயிலுக்கு வெளியே உள்ள பரக்காமணி காணிக்கை எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் கோயிலுக்குள் 5 அடி உயரத்தில் ஸ்டீல் உண்டி அமைக்க சோதனை நடத்தப்பட்டது.

இதில் 3 புறமும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. நடுவில் இரும்பு கம்பி ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை அதிகாரிகள் சோதனை முறையில் ஆய்வு செய்து கொண்டு வருகின்றனர்.

Tags :