Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டில் நடைபெறும் முக்கிய விழக்களை தேவஸ்தானம் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டில் நடைபெறும் முக்கிய விழக்களை தேவஸ்தானம் வெளியீடு

By: vaithegi Mon, 01 Aug 2022 2:04:23 PM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டில் நடைபெறும் முக்கிய விழக்களை தேவஸ்தானம் வெளியீடு

திருப்பதி: திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி ஆண்டாள் திருவாடிபூர சாத்துமுறை, புரசைவாரி தோட்டத்துக்கு உற்சவர் மலையப்பசாமி எழுந்தருள்கிறார்.

இதை அடுத்து 2-ந்தேதி கருடபஞ்சமியையொட்டி கருடசேவை, 6-ந்தேதி தரிகொண்டா வெங்கமாம்பா பிறந்த நாள், 8-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை வருடாந்திர பவித்ரோற்சவம், 9-ந்தேதி நாராயணகிரி பூங்காவில் சத்ரஸ்தாபனோற்சவம்

tirupati,important festivals,devasthanam ,திருப்பதி , முக்கிய விழக்கள்,தேவஸ்தானம்

மேலும் 11-ந்தேதி சிரவண பவுர்ணமி, ரக்‌ஷா பந்தம் பண்டிகை, வைகானச மகாமுனி ஜெயந்தி. 12-ந்தேதி ஹயக்ரீவர் ஜெயந்தி, உற்சவர் மலையப்பசாமி வைகானச சன்னதிக்கு எழுந்தருளல், 15-ந்தேதி சுதந்திர தினம், 19-ந்தேதி கோகுலாஷ்டமி ஆஸ்தானம்,

இதை தொடர்ந்து 20-ந்தேதி உறியடி உற்சவம், 29-ந்தேதி பலராமர் ஜெயந்தி, 30-ந்தேதி வராஹ ஜெயந்தி, 31-ந்தேதி விநாயக சவிதி (விநாயகர் சதுர்த்தி விழா) என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :