Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பகத்தர்களுக்கு இன்று முதல் அனுமதி

சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பகத்தர்களுக்கு இன்று முதல் அனுமதி

By: vaithegi Thu, 01 June 2023 09:33:43 AM

சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பகத்தர்களுக்கு இன்று முதல் அனுமதி

சென்னை: சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி ....மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். ஒவ்வொரு மாதமும் இக்கோயிலில் பிரதோ‌ஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி அந்நாட்களில் மட்டுமே பக்தர்களும் மலையேறவும், கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள்.

அந்தவகையில், பிரதோஷம் மற்றும் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் வருகிற ஜூன் 4ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சதுரகிரி மலை இக்கோவிலுக்கு மலையேறி சாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

chaturagiri,sami darshanam ,சதுரகிரி , சாமி தரிசனம்

தற்போது கோடை காலம் என்பதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்லக்கூடாது என்றும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மலை ஏறக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என்றும், அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்படும் எனவும் வனத்துறை அறிவித்து உள்ளது. மேலும் அத்துடன் மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Tags :