Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • ஆனி பவுர்ணமிக்கு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி

ஆனி பவுர்ணமிக்கு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி

By: vaithegi Wed, 28 June 2023 12:40:07 PM

ஆனி பவுர்ணமிக்கு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி

வத்திராயிருப்பு: ஆனி மாத பவுர்ணமி வழிபாட்டுக்காக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வருகிற ஜூலை 1 முதல் 4-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் சதுரகிரி மலை அமைந்து உள்ளது. இதையடுத்து இங்குள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களின் தரிசனத்துக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற வனத் துறை அனுமதி வழங்குகிறது.

chaturagiri,ani pournami ,சதுரகிரி ,ஆனி பவுர்ணமி

அதன்படி ஆனி மாத பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு வருகிற ஜூலை 1 முதல் 4-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்நாட்களில் தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து காலை 7 முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று வனத் துறை அறிவித்து உள்ளது.

Tags :