Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

By: vaithegi Tue, 18 Oct 2022 10:17:35 AM

சபரிமலை ஐயப்பன் கோவில்   இன்று முதல் ஐந்து நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

சபரிமலை : பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி ... ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபம் ஏற்றி வைத்தார்.

இதயடுத்து சபரிமலை தரிசனத்திற்காக வெர்ச்சுவல் கியூ மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு இன்று முதல் தரிசன அனுமதி வழங்கப்படுகிறது . முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு நிலக்கல் பகுதியில் உள்ள நேரடி முன்பதிவு மையங்களில் பதிவு செய்து தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டிருக்கிறது.

devotees,sabarimala ,பக்தர்கள் ,சபரிமலை

அதை தொடர்ந்து பக்தர்களின் தரிசனம் முடிந்து அக்டோபர் 22ஆம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தகவல் தெரிவித்திருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ஆம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது.

மேலும் டிசம்பர் 27ஆம் தேதி வரும் மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும் . அதைத் தொடர்ந்து டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி நடை அடைக்கப்படும். 2023ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொன்னம்பலம் மேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்திருக்கிறது.

Tags :