Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சதுரகிரியில் நாளை இரவில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை

சதுரகிரியில் நாளை இரவில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை

By: vaithegi Fri, 17 Feb 2023 1:37:47 PM

சதுரகிரியில் நாளை இரவில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை

விருதுநகர் : இரவில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை .... மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில், இம்மாதம் மாசி மாத பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு நாளை முதல் 21-ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இங்கு மகா சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

இதையடுத்து இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர். மகா சிவராத்திரியன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பகலில் 4 கால பூஜைகளும், இரவில் 4 கால பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்ற உள்ளன.

chaturagiri,devotees ,சதுரகிரி,பக்தர்கள்

இதனை ஆடுது பக்தர்களின் வசதிக்காக தேவையான அடிப்படை வசதிகளையும், ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்து கொண்டு வருகின்றனர். அதேபோன்று மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து தாணிப்பாறை மலை அடிவாரப் பகுதிக்குச் செல்ல சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. நாளை மகா சிவராத்திரிய ஒட்டி தாணிப்பாறை வழியாக, காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மலை ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் கோவிலில் நாளைய தினம் இரவில் தங்கி வழிபட பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் சாப்டூர் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து இது பற்றி அவர்கள் தெரிவித்துள்ளதாவது, “சாப்டூர் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலதரப்பட்ட விலங்குகள் காணப்படுகின்றன. இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படும் என்பதால், இரவு நேரத்தில் பக்தர்கள் தங்கி வழிபட அனுமதி இல்லை” என தெரிவித்தனர்.

Tags :