Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சதுரகிரிக்கு ஆக.12 -17ம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம்

சதுரகிரிக்கு ஆக.12 -17ம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம்

By: vaithegi Fri, 04 Aug 2023 1:29:13 PM

சதுரகிரிக்கு ஆக.12 -17ம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம்

சென்னை: ஆடி அமாவாசை திருவிழா , பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி ... ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்து உள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில்.

இதனை அடுத்து அடிவாரப் பகுதியான தாணிப்பாறையிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு வனப்பகுதி வழியே நடந்து செல்ல வேண்டும்.

இதையடுத்து பொதுவாக இந்த கோயிலுக்கு அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் என்று 8 நாட்களுக்கு மட்டுமே மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

devotees,chaturagiri ,பக்தர்கள் ,சதுரகிரி

ஆனால் அதேசமயம் மழை நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம்

கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வருகிற ஆக.12 -17ம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம் என்று மாவட்டம் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Tags :