Advertisement

கிருஷ்ண ஜெயந்திக்கு பால் பேடா செய்யுங்கள்

By: Nagaraj Sun, 09 Aug 2020 7:48:51 PM

கிருஷ்ண ஜெயந்திக்கு பால் பேடா செய்யுங்கள்

இனிப்பு வகைகள் என்றாலே கிருஷ்ணருக்கு இஷ்டமான ஒன்று. அதிலும் பாலில் செய்யப்படும் இனிப்புகள் விருப்பமோ விருப்பம். அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்திக்கு பால் பேடா செய்து நிவேதனம் செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:

பால் (அதிக கொழுப்புச் சத்து உள்ளது) – 1லிட்டர்
சர்க்கரை – ¼கப்
பால் பவுடர் – ½கப்
நெய் – 2தேக்கரண்டி
குங்குமப்பூ – சிறிதளவு
பாதாம் பருப்பு – 20

milk thistle,milk,ghee,almonds,saffron ,பால் பேடா, பால், நெய், பாதாம், குங்குமப்பூ

செய்முறை: ஒரு வாணலியில் பாலை நன்கு கொதிக்க விடவும். பால் பொங்க ஆரம்பித்ததும், மிதமான சூட்டில் பாலின் அளவு பாதியாக குறையும் வரை கொதிக்க விடவும். அவ்வப்பொழுது கிளறிக் கொண்டே இருக்கவும்.

சர்க்கரையை சிறிது சிறிதாக பாலில் போட்டு குங்குமப்பூவையும் போட்டு கலவை கெட்டியாகும் வரை நன்கு கிளறவும். பால் பவுடரையும் சிறிது சிறிதாக போடு நன்கு கிளறிக் கொள்ளவும்
அடுப்பை அணைத்து விட்டு, நெய்யை விட்டு கிளறவும். அதன் சூட்டிலேயே நெய் உருகிக் கொள்ளும்.

கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் போது நன்கு சப்பாத்தி மாவு பிசைவது போல பிசைந்துக் கொள்ளவும். பின்னர் சிறிது சிறிது உருண்டைகளாக உருட்டி, அதை தட்டையாக்கிக் கொள்ளவும்.
ஒவ்வொரு பேடாவின் மேலும் பாதாம் சீவலை தூவி மிதமாக அழுத்தி விடவும். உங்களின் பால் பேடா தயார்.

Tags :
|
|