Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • தீபாவளிக்கு எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று தெரியுங்களா?

தீபாவளிக்கு எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று தெரியுங்களா?

By: Nagaraj Sun, 23 Oct 2022 11:11:11 PM

தீபாவளிக்கு எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று தெரியுங்களா?

சென்னை: தீபாவளி நல்லெண்ணெய் குளியல்... தீபாவளிக்கு உடலில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். அந்த வகையில், இக்குளியலை சூரிய உதயத்துக்கு முன்னதாக எவரும் செய்யக்கூடாது என்பது சாஸ்திர நியதி.

ஆனால் தீபாவளி தினத்தில் சூரிய உதயத்துக்கு முன்னரும் உடலில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம். ஏனெனில் நரகாசுரனை மக்கள் நினைக்க வேண்டும் என பூமாதேவி ஸ்ரீ கிருஷ்ணரிடம் வேண்டினாள். இந்த வரத்தை ஸ்ரீ கிருஷ்ணரும் அருளினார்.

diwali,essential oil,bath,sunrise,swimming ,தீபாவளி, நல்லெண்ணெய், குளியல், சூரிய உதயம், நீராடல்

ஆகையால், நல்லெண்ணெயில் உடலில் தேய்த்து குளிக்கிறோம். காரணம், நல்லெண்ணெயில் மகாலட்சுமி வாசம் செய்கிறார்.
அதேபோல், நீரில் கங்காதேவியும் எழுந்தருளியுள்ளார் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. எனவேதான் தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை கங்கா ஸ்நானம் என்கின்றனர் நம் முன்னோர்.

அருணோதய காலம் என்பது சூரியன் உதயத்துக்கு 48 நிமிடம் முன்புவரை உள்ள காலம் ஆகும். அந்த வகையில், காலை 6 மணிக்கு சூரிய உதயம் என்றால், 5.15 மணிக்கு நீராட வேண்டும்.
இந்த ஆண்டு தீபாவளியில் அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் நல்லது.

Tags :
|
|