Advertisement

திரௌபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

By: Nagaraj Mon, 28 Aug 2023 10:59:14 PM

திரௌபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

திருச்சி: மகா கும்பாபிஷேகம்... திருச்சி ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருச்சி கீழ சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக இன்று நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கந்த 26ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவேரி படித்துறையில் இருந்து மேளதாளம் முழங்க யானை மீது புனித நீர் 300 க்கு மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர்.

kumbabhishekam,devotees,almsgiving,arrangement,took place ,கும்பாபிஷேகம், பக்தர்கள், அன்னதானம், ஏற்பாடு, நடந்தது

அதனைத் தொடர்ந்து அன்று மாலை முதலாம் கால யாக சாலை தொடங்கியது. நான்காம் கால யாகசாலையான இன்று மஹாபூர்ணாஹூதி நடைபெற்று காலை 6.00 மணிக்குமேல் 7.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம் திருக்குட நன்னீராட்டு விழா நடைப்பெற்றது .

அதனைத் தொடர்ந்து பக்த கோடிகள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் தெருவாசிகள் செய்திருந்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags :