Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி பிரம்மோற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்

திருப்பதி பிரம்மோற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்

By: vaithegi Sat, 06 Aug 2022 1:02:05 PM

திருப்பதி  பிரம்மோற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு  முகக்கவசம் கட்டாயம்

திருப்பதி : திருப்பதி எழுமையான் கோவிலில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். இந்தா நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக வருடாந்திர பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெற இருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பின், 4 மாட வீதிகளில் மலையப்ப சுவாமி வீதியுலா நடக்க உள்ளது.

இதை அடுத்து இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் திருமலை மற்றும் அலிபிரியில் பக்தர்களுக்கு தற்காலிக தங்கும் வசதிகள் செய்யப்படும். வாகன சேவைகள் காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

mask,thirupati,brahmotsavam ,முகக்கவசம் ,திருப்பதி  ,பிரம்மோற்சவம்

மேலும் ஆர்ஜித சேவைகள், ஸ்ரீவாணி, வி.ஐ.பி., ‘பிரேக்’ தரிசனங்கள், 300 ரூபாய் விரைவு தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கான சலுகை தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இதனையா தொடர்ந்து பக்தர்கள் அதிகம் வருவதால் கூட்டத்தை சமாளிக்க, தினமும் ஒன்பது லட்சம் லட்டுகள் நிலுவையில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலைக்கு வரும் அனைத்து வாகனங்களையும் வெளிவட்ட சாலையில் நிறுத்தி, பக்தர்களை இலவச பஸ்கள் வாயிலாக பலபகுதிகளுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் பாதுகாப்பிற்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக அனைத்து இடங்களும் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருட சேவை நாள் என்பதால் அதற்கு மறுநாள் மதியம் 12:00 மணி வரை, திருமலை திருப்பதி இடையே மலைப்பாதையில் இரு சக்கர வாகன போக்குவரத்துக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags :
|