Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சம் பெருகும்

சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சம் பெருகும்

By: Nagaraj Sun, 25 Dec 2022 10:49:34 PM

சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சம் பெருகும்

சென்னை: தடைகளின்றி காரியங்கள் வெற்றியடையும்... சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சம் பெருகும் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

சங்கடஹர சதுர்த்தி விரதமிருப்பவர்கள், அன்றைய நாள் அதிகாலையில் எழுந்து நீராடி பிள்ளையார் கோவிலுக்கு சென்று 11 முறை வலம் வர வேண்டும். அதன் பின்பு பிள்ளையாருக்கு அருகம்புல் சாற்றி, தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம். வழிபாடு முடிந்தவுடன் தலையில் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போட வேண்டும்.

சதுர்த்தி விரதம் மேற்கொள்பவர்கள் பித்ரு தோஷத்தில் இருந்து நீங்க அன்றைய நாளில் கோவிலுக்கு சென்று வந்ததும் ஒரு ஆழாக்கு பச்சரிசியில், வெல்லம் கலந்து, வாழைப் பழத்தை துண்டு துண்டாக நறுக்கி அதனுடன் சேர்த்து உருண்டைகளாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதனை உங்கள் அருகில் இருக்கும் பசு விற்கு தானம் கொடுக்க வேண்டும். உங்கள் கைகளால் இவ்வாறு 11 சதுர்த்தி செய்து வர பித்ரு தோஷம் விலகி நிறைய நன்மைகள் உண்டாகும். ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி விரத தினத்தன்றும் பசுமாட்டிற்கு உணவு கொடுப்பதால் விரதத்திற்கு பலன் அதிகரிக்கும்.

ganesha,arukumbul,temple,good,lamp,goodness ,விநாயகர், அருகம்புல், கோவில், நல்லது, தீபம், நன்மை

உங்களுடைய வீட்டை, உங்களுடைய பூஜை அறையையும் சுத்தம் செய்து வைத்துக் காலை 6 மணிக்கு முன்பாகவே குளித்து விட்டு, பூஜை அறையில் விநாயகரை நினைத்து ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து உங்களுடைய விரதத்தைத் தொடங்க வேண்டும்.

அவரவர் உடல் சவுகரியத்தைப் பொறுத்து விரதம் இருந்து கொள்ளுங்கள். உடல்நிலை சரியில்லாதவர்கள் மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், பலகாரங்கள் சாப்பிட்டும் விரதம் இருக்கலாம்.

அன்றய தினம் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, அதன் பின்பு காலையிலேயே விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகருக்கு உங்களது கையால் அருகம்புல் மாலையை வாங்கி கொடுக்க வேண்டும். முடிந்தால் பசுமையாக விளைந்திருக்கும் அருகம்புல்லை உங்கள் கையாலேயே பறித்து, அதை மாலையாகத் தொடுத்து விநாயகருக்கு கொடுப்பது மிக மிக நல்லது.

Tags :
|
|
|