Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சபரிமலையில் ஏற்பட்ட தீவிபத்தை விரைந்து அணைத்த தீயணைப்பு படையினர்... குவியும் பாராட்டு

சபரிமலையில் ஏற்பட்ட தீவிபத்தை விரைந்து அணைத்த தீயணைப்பு படையினர்... குவியும் பாராட்டு

By: Nagaraj Sat, 10 Dec 2022 3:10:35 PM

சபரிமலையில் ஏற்பட்ட தீவிபத்தை விரைந்து அணைத்த தீயணைப்பு படையினர்... குவியும் பாராட்டு

திருவனந்தபுரம்: சபரிமலையில் நெய் தேங்காய் கொட்டகையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயை தீயணைப்பு வீரர்கள் விரைந்து அணைத்தனர். இதற்கு பக்தர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சபரிமலையில் அனைத்து தேங்காய்களும் கோயிலுக்கு அருகில் உள்ள கொட்டகையில் வைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் கொட்டகை தீயில் இருந்து தப்பியது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டி செல்கின்றனர். மேலும் கோயிலில் தேங்காய் எண்ணெய் அபிஷேகம் நடைபெறும்.

இந்த தேங்காய்கள் அனைத்தும் கோயிலுக்கு அருகில் உள்ள கொட்டகையில் வைக்கப்பட்டுள்ளன. பின்னர் ஒப்பந்ததாரர் அங்கிருந்து எடுத்துச் செல்வார். இந்த கொட்டகையில் நேற்று இரவு 11.45 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதை பார்த்த பக்தர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

fire accident,sabarimala ayyappan temple,trivandrum ,சபரிமலை, தீ விபத்து, தேங்காய், பாராட்டுக்கள்

தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த கொட்டகைக்கு அருகில் மற்றொரு கொட்டகை இருந்தது. தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் கொட்டகை தீயில் இருந்து தப்பியது. இதையடுத்து சபரிமலையில் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

மேலும் தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :