- வீடு›
- ஆன்மீகம்›
- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரிக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டு நாளை வெளியீடு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரிக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டு நாளை வெளியீடு
By: vaithegi Thu, 23 Nov 2023 6:04:07 PM
திருப்பதி : 2024 பிப்ரவரி மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியீடு ...திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள அறைகளும் நாளை மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.எனவே பக்தர்கள் https://ttdevasthanams.ap.gov.in இணையதளத்தில் தரிசன டிக்கெட் மற்றும் அறைகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏழுமலையான் கோயிலில் அடுத்தாண்டு பிப்ரவரி 16 அன்று நடைபெறும் ரதசப்தமிக்காக தன்னார்வலர்களாக ஸ்ரீவாரி சேவா திட்டத்தில் சேவை செய்வதற்கான முன்பதிவு இந்த மாதம் வருகிற 27-ம் தேதி அன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும்.
இதற்காக 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இந்த தன்னார்வலர் சேவையில் பதிவு செய்ய தகுதியுடையவர்கள்.
இதேபோன்று, 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான ஸ்ரீவாரி சேவை மற்றும் நவநீத சேவையில் பங்கேற்க இந்த மாதம் 27 அன்று மதியம் 12 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் பக்தர்களுக்கு சேவை செய்வதற்கான தன்னார்வ சேவைக்காக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுவுள்ளது.