Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • ராமநாதசுவாமி கோவிலில் மகாசிவராத்திரி திருவிழாவிற்கான நாளை கொடியேற்றம்

ராமநாதசுவாமி கோவிலில் மகாசிவராத்திரி திருவிழாவிற்கான நாளை கொடியேற்றம்

By: vaithegi Fri, 10 Feb 2023 09:40:27 AM

ராமநாதசுவாமி கோவிலில் மகாசிவராத்திரி திருவிழாவிற்கான நாளை கொடியேற்றம்

ராமேஸ்வரம் : நாளை கொடியேற்றம் .... ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் மகாசிவராத்திரி திருவிழாவிற்கான கொடியேற்றம் நாளை நடைபெறுகிறது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு மகாசிவராத்திரி திருவிழாவிற்கான கொடியேற்றம் நாளை தொடங்குகிறது.

flag hoisting,mahashivaratri ,கொடியேற்றம் ,மகாசிவராத்திரி

இதையடுத்து நாளை காலை 10.30 மணியிலிருந்து 12 மணிக்குள் ஸ்வாமி சன்னதி முன்பு உள்ள நந்தி மண்டபத்தின் கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்படுகிறது. அது தொடங்கி தொடர்ந்து இரவு 8 மணிக்கு ஸ்வாமி நந்திகேஸ்வரர் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி வாகனத்திலும் எளுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மேலும் தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக மகாசிவராத்திரி பிப் 18-ம் தேதி நடைபெறுகிறது. மகாசிவராத்திரியை முன்னிட்டு நாளை முதல் தினம்தோறும் இரவு ஸ்வாமி, அம்பாள் பல வாகனங்களில் பக்தர்களுக்கு எழுந்தருள்வதுடன், வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

Tags :