Advertisement

ஆன்மீக நன்மைகளை உள்ளடக்கிய பிரிஞ்சு இலை

By: Nagaraj Wed, 04 Nov 2020 09:06:22 AM

ஆன்மீக நன்மைகளை உள்ளடக்கிய பிரிஞ்சு இலை

வாசனை பொருளாக மட்டுமே பார்க்கப்படும் பிரிஞ்சு இலையில் பல்வேறு ஆன்மீக நன்மைகள் உள்ளன.

பிரியாணி, ஆட்டுக்கறி குழம்பு போன்ற உணவுகளில் பெரும்பாலும் பிரிஞ்சு இலை என்ற பிரியாணி இலை கட்டாயம் சேர்த்திருப்பார்கள். பிரியாணி இலை உன்னதமான பல ஆற்றல்களை தன்னகத்தே கொண்டது.

இதன் பூர்வீகமாக கிரேக்கம் இருந்தாலும், கிரேக்க கடவுளாக கருதப்படும் அப்பாசோ பிரிஞ்சு இலையை பயன்படுத்தி வெற்றி பெற்றதாகவும் கருதப்படுகிறது. சூரியனின் தன்மையை கிரகிக்க பிரிஞ்சு இலை உதவுகிறது.

french leaf,myth,lakshmi kataksham,evil forces ,பிரிஞ்சு இலை, ஐதீகம், லட்சுமி கடாக்ஷம், தீய சக்திகள்

இதனை அதிகளவு பயன்படுத்தி வந்தால் ஆன்ம பலம் அதிகரிக்கும் என்றும், இதனை தலையணைக்கு கீழே வைத்து உறங்கி வந்தால் நல்ல உறக்கம் ஏற்படும் என்றும், தெளிவான மனநிலை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பிரிஞ்சு இலையை எரிப்பதால் ஏற்படும் புகை உடலுக்கும், மனதிற்கும் மிகவும் நல்லது. வீட்டில் இருக்கும் தீய சக்திகளை விரட்டும் வல்லமையும் கொண்டது. பிரிஞ்சு இலையை பொடியாக செய்து பன்னீருடன் சேர்த்து வீட்டில் தெளித்து வந்தால் லட்சுமி கடாக்ஷம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Tags :
|