Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டும் வாழைப்பழம், தேங்காய்!!!

பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டும் வாழைப்பழம், தேங்காய்!!!

By: Nagaraj Thu, 07 May 2020 09:08:39 AM

பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டும் வாழைப்பழம், தேங்காய்!!!

சென்னை: ஆன்மீக வழிபாடுகளில் முக்கிய இடம் பிடிக்கும் பழம் என்றால் அது வாழைப்பழம் தான்.
அனைத்து தெய்வங்களுக்கும் தவறாமல் பூஜையில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.

the lord,the unborn,the spiritual,the worship,the banana. ,இறைவன், பிறவியற்ற தன்மை, ஆன்மீகம், வழிபாடு, வாழைப்பழம்.

இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டுதலை முன்னிறுத்தி நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை. மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால் தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.

the lord,the unborn,the spiritual,the worship,the banana. ,இறைவன், பிறவியற்ற தன்மை, ஆன்மீகம், வழிபாடு, வாழைப்பழம்.

பழம், கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.

Tags :