Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • இந்தூரில் ஒரே பந்தலில் 108 விதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள்

இந்தூரில் ஒரே பந்தலில் 108 விதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள்

By: Nagaraj Thu, 21 Sept 2023 11:00:24 PM

இந்தூரில் ஒரே பந்தலில் 108 விதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள்

மத்தியபிரதேசம்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஜெய்ராம்பூர் காலனியில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் 108 விதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையடுத்து முக்கிய நகரங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

சில இடங்களில் விநாயகர் சிலைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் விநாயகரின் பல்வேறு வடிவங்கள் காட்சியளிக்கின்றன.

ganesha idols,indore pandal,108 forms, ,108 வடிவங்களில், இந்தூர் பந்தலில், விநாயகர் சிலைகள்

அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஜெய்ராம்பூர் காலனியில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் 108 விதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

சங்கு, சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ், சாய்பாபா, சிவன், கிருஷ்ணர் மற்றும் பல உருவ சிலைகள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அனில் ஆகா கூறியதாவது:

இந்த காலனியில் கடந்த 40 ஆண்டுகளாக சதுர்த்தி விழா நடத்தி வருகிறோம். விநாயகப் பெருமானை ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான கருப்பொருளுடன் வடிவமைத்து பிரதிஷ்டை செய்கிறோம்.

இந்த ஆண்டு விநாயகப் பெருமானை 108 விதமான வடிவங்களில் சித்தரித்துள்ளோம் என்றார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :