Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • மாட்டுப்பொங்கலை ஒட்டி நந்திக்கு 100 கிலோவில் காய்கறிகள், பழங்களை கொண்டு அலங்காரம்

மாட்டுப்பொங்கலை ஒட்டி நந்திக்கு 100 கிலோவில் காய்கறிகள், பழங்களை கொண்டு அலங்காரம்

By: Nagaraj Wed, 18 Jan 2023 9:13:36 PM

மாட்டுப்பொங்கலை ஒட்டி நந்திக்கு 100 கிலோவில் காய்கறிகள், பழங்களை கொண்டு அலங்காரம்

தஞ்சாவூர்: தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நந்திக்கு சுமார் 100 கிலோ கொண்ட காய்கறிகள், பழங்கள் மூலம் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.

ஐயாறப்பர் குதிரை வாகனத்தில் எழுந்தருளியும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவோலக்க மண்டபத்தில் இருந்து மேலதாள கச்சேரியுடன் சென்று முருகன் சன்னதி முன்பு காளை மாடு பசுமாடு யானை கன்று குட்டிகள் ஆகியவற்றை ஆவாரம் பூ, மாவிலை, எருக்கம் பூ, பூமாலை, காகித மாலை, புது கயிறுகள் போடப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.

காணும் பொங்கல்: சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் ஐயாறபர் அம்பாளுக்கு முன்பாக பொங்கல்யிடபட்டு இருந்த பொங்கலை முன்பு படையலிட்டு பஞ்சமுக தீபாரதனை காண்பிக்கப்பட்டு மாடுகளுக்கு யானைக்கும் சாதங்கள் ஊட்டப்பட்டன.

administration,matuppongal,special worship,temple,instruction ,நிர்வாகம், மாட்டுப்பொங்கல், சிறப்பு வழிபாடு, கோவில், அறிவுறுத்தல்

பின்பு மாடுகளை அவிழ்த்து தேரடி வரையும் ஓட்டிச் சென்று திரும்பி கொண்டு வந்து மாட்டுத்தொழுவத்தில் கட்டப்பட்டது.

அய்யாறபர் அம்பாள் பல்வேறு வீதிகள் வழியாக மேலதாள வான வேடிக்கையுடன் சந்நிதியை வந்து அடைந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பசு மாடுகளை சுற்றி வலம் வந்து கும்பிட்டு இறைவனிடைய அருளை பெற்று சென்றார்கள்.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் 27- வது மகா குரு சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் அறிவுறுத்தலின்படி கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

Tags :
|