Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சக்தி வாய்ந்த துளசி செடியை வழிபடுவது எப்படி? தெரிந்து கொள்வோம்

சக்தி வாய்ந்த துளசி செடியை வழிபடுவது எப்படி? தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Wed, 22 Feb 2023 10:54:10 PM

சக்தி வாய்ந்த துளசி செடியை வழிபடுவது எப்படி? தெரிந்து கொள்வோம்

சென்னை: வழிபடுவது எப்படி?... துளசி செடி என்பது மிகவும் சக்தி வாய்ந்த சரியாக இந்து மதத்தில் நம்பப்படுகிறது. துளசி செடியை மகாலட்சுமிக்கு இணையாக கூறுவார்கள்.

துளசி செடிதான் மகாலட்சுமி என்று பலரால் இன்றும் நம்பப்படுகிறது. துளசிச் செடியை வீட்டில் வளர்த்தால் பல நன்மைகளை அள்ளித் தரும். அத்தகை துளசிச் செடியை எவ்வாறு வழிபடுவது என்பதை பார்ப்போம்.

துளசி இலை பட்ட தண்ணீர், கங்கை நீருக்குச் சமமானதாக கருதப்படுகிறது. துளசி செடியில் தேங்கியிருக்கும் நீர் புண்ணிய தீர்த்தத்துக்கு நிகரானது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துளசி பூஜை செய்தால் எட்டு வகை செல்வங்களும் பெறலாம் என்பது ஐதிகம். கன்னிப்பெண்கள் திருமணத்தடை நீங்க துளசி வழிபாடு செய்தால் விரைவில் மாங்கல்ய தோஷம் நீங்கி மண வாழ்க்கை அமையும்.

income,water,tulsi plant,worship,will increase ,பணவரவு, தண்ணீர், துளசி செடி, வழிபாடு, அதிகரிக்கும்

துளசியை பொறுத்தவரை மூன்று வகைகள் உள்ளன. அவற்றில் சாதாரண துளசியானது சிறு சிறு இலைகளையும், பெரிதான இலைகளையும் கொண்டதுமாக இரண்டு வகையும், கருந்துளசி என கூறப்படும் மற்றொரு வகையும் இருந்து வருகிறது.

இதில் சாதாரண துளசியாக இருக்கும் சிறு சிறு இலைகளை கொண்டவை மகாலட்சுமிக்கு இணையானவை. இந்தச் செடியை துளசி மாடத்தில் வைத்து வளர்ப்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும்.

துளசிச் செடியை தெய்வீக ஆற்றல் படைத்ததாக கருதப்படுவதால் அவற்றை மண் தொட்டிகள் அல்லது மண் சார்ந்த பொருட்களில் வளர்ப்பது தான் மிகவும் நல்லது. சாதாரண பிளாஸ்டிக் கவர் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் வைப்பதை தவிர்த்து விடுங்கள். துளசிச் செடியில் தினமும் சுத்தமான தண்ணீரை ஊற்றுவது நம் வீட்டில் பண வரவை அதிகரிக்கும்.

Tags :
|
|