Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • உங்களுக்கு திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரம் செய்யுங்கள்

உங்களுக்கு திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரம் செய்யுங்கள்

By: vaithegi Sun, 05 Nov 2023 4:56:30 PM

உங்களுக்கு திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரம் செய்யுங்கள்


ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் உடைய அமைப்பு சரியாக இல்லை என்றாலும் திருமணம் தள்ளிப் போகும் என்று சொல்லப்படுகிறது இதற்கு செவ்வாய் தோஷம் தான் இருக்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. ஜாதகத்தில் உள்ள செவ்வாய் கிரகம் சாதகம் இல்லாத சூழ்நிலையில் இருந்தாலும் வரன் எளிதில் அமையாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதற்கு அடுத்ததாக ஜாதகத்தில் குரு பகவானுடைய அருள் இல்லாமல் இருந்தாலும் இது போன்ற சூழ்நிலை நிலவும். ஜாதகத்தில் இந்த இந்த இரண்டு கிரகங்களும் சாதகம் இல்லாத சூழ்நிலையில் இருந்தால் நிச்சயம் திருமண தடை ஏற்படும் தடைகள் இருக்கும். இந்த ஜாதகக்காரர்களுக்கு திருமணம் கை கூடினாலும் அதில் பல இன்னல்களை சந்திப்பதுடன் திருமண முறிவு வரை அது செல்லும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

parikaram,marriage ,பரிகாரம் ,திருமணம்

இதையடுத்து இந்த காரணங்களால் உங்களுக்கு திருமண தடை இருப்பின் இந்த எளிய பரிகாரத்தை செய்து கொள்ளலாம். அதற்கு திருவண்ணாமலையில் உள்ள கிரிவலப் பாதையில் அமைந்திருக்கும் சந்திர லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த அபிஷேகம் எந்த மாதிரியான அபிஷேகமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இந்த அபிஷேகம் செய்யும் பொழுது உங்கள் திருமணம் தடை முழுவதுமாக நீங்கி நல்லதொரு வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு செய்ய வேண்டும். இதை செய்யும் பொழுது நிச்சயம் தடை நீங்கி திருமணம் கை கூடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Tags :