Advertisement

முக்கியத்துவம் நிறைந்த நன்மை பயக்கும் தானங்கள்

By: Nagaraj Tue, 30 Aug 2022 11:31:37 PM

முக்கியத்துவம் நிறைந்த நன்மை பயக்கும் தானங்கள்

சென்னை: நன்மை பயக்கும் சில தானங்கள்...இந்து மதத்தில் தானத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சில வகை தானங்கள் பல தலைமுறைகளுக்கு நன்மை பயக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கை.

ஏழைகளுக்கு ஆடை, உணவு மற்றும் பசுக்களை தானம் செய்வது மிகவும் சிறப்பு. அமாவாசை, சிரார்த்தம், கிரகணம் போன்ற விசேஷ நாட்களில் தானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கீழே பட்டியலிடப்பட்டுள்ள 7 வகையான தாங்கள் சிறப்புப் பலன்களை கொடுக்கின்றன. இவை பல தலைமுறைகள் காக்கும் என நம்பப்படுகிறது.

அன்னதானம்: தானங்களில் சிறந்தது அன்னதானம். தானியங்களை தானம் செய்வதால் லட்சுமி மற்றும் அன்னை அன்னபூரணி இருவருக்குமே ஆசிகள் கிடைக்கும் என்பது மத நம்பிக்கை. அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

வெல்லம்: வெல்லம் தானம் செய்வதால் வறுமை நீங்கி, தொண்டு செய்ய வழி திறக்கும். மறுபுறம் வெல்லம் தானம் செய்வது மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

எள் தானம்: அமாவாசை அன்று எள் தானம் செய்வதன் சிறப்பு ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஷ்ராத்தம் அல்லது ஒருவரின் மரணத்தின் போது கருப்பு எள்ளை தானம் செய்வதால், பல பிரச்சனைகள் மற்றும் பேரழிவுகளில் இருந்து ஒருவரை பாதுகாக்க முடியும்.

ghee donation,cow donation,suba diti,members,progress ,நெய் தானம், கோ தானம், சுப திதி, உறுப்பினர்கள், முன்னேற்றம்

ஆடை: ஏழை எளியோருக்கு புதிய சுத்தமான ஆடைகளை தானம் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் பணியில் வரும் தடைகள் அனைத்தும் நீங்கும். ஜாதக ரீதியிலான பல தோஷங்களும் நீங்கும்.

உப்பு தானம்: உப்பை தானம் செய்வதும் மிகவும் சிறப்பு. சிரார்த்தத்தின் போது உப்பு தானம் செய்வதால், பலன்கள் பன்மடங்காகும்

நெய் தானம்: நெய் தானம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஜோதிட சாஸ்திரப்படி, தேவைப்படுபவர்களுக்கு பசு நெய்யை தானம் செய்வது சுப பலன்களை கொடுக்கும். இது குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்திற்கான வழி திறக்கிறது.

கோ தானம்: இந்து தர்மத்தில் கோ தானம் என்னும் பசு தானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த ஒரு சுப திதியிலும் பசுவை தானம் செய்வது பல பிறவிகளுக்கும் பல தலைமுறைகளுக்கும் நன்மை பயக்கும்.

Tags :