Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதியில் கடந்த 7 மாதத்தில் இத்தனை கோடி உண்டியல் காணிக்கையாக வசூலா ?

திருப்பதியில் கடந்த 7 மாதத்தில் இத்தனை கோடி உண்டியல் காணிக்கையாக வசூலா ?

By: vaithegi Tue, 18 Oct 2022 3:48:34 PM

திருப்பதியில் கடந்த 7 மாதத்தில்  இத்தனை  கோடி  உண்டியல் காணிக்கையாக வசூலா ?

திருப்பதி: ஆகஸ்டு மாதம் ரூ.140 கோடி உண்டியல் காணிக்கையாக வசூல் .... திருப்பதியில் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களில் குறைந்த அளவு பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அப்போது மாதத்திற்கு ரூ.10 கோடி வரை மட்டுமே உண்டியல் காணிக்கையாக வசூலானது. கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து படிப்படியாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

தொடர்ந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் அதிகளவிலான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 19.72 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

tirupati ,காணிக்கை,திருப்பதி

இதனை அடுத்து உண்டியலில் ரூ.128.61 கோடியும், ஏப்ரல் மாதம் 20.62 லட்சம் பக்தர்களும், ரூ.127.63 கோடியும், மே மாதம் 22.68 லட்சம் பக்தர்களும், ரூ.130.29 கோடியும் உண்டியலில் காணிக்கையாக வசூலானது. ஜூன் மாதம் 23.23 லட்சம் பக்தர்களும், ரூ.123.74 கோடியும், ஜூலை மாதம் 23.45 லட்சம் பக்தர்களும், ரூ.139.46 கோடியும், ஆகஸ்டு மாதம் 22.80 லட்சம் பக்தர்களும், ரூ.140.07 கோடியும்

மேலும் செப்டம்பர் மாதம் 21.12 லட்சம் பக்தர்களும் ரூ.122.19 கோடியும் உண்டியல் காணிக்கையாக வசூலானது. கடந்த 7 மாதத்தில் மட்டும் 1 கோடியே 53 லட்சத்து 62 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ரூ.911.19 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது. ஆகஸ்டு மாதம் மட்டும் ரூ.140 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலாகி ஒரே மாதத்தில் அதிகளவில் உண்டியல் வசூல் என்று சாதனை படைத்துள்ளது.

Tags :