Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதியில் தற்போது 3 மணி நேரத்தில் சுவாமியை தரிசனம் செய்ய தேவஸ்தானம் ஏற்பாடு

திருப்பதியில் தற்போது 3 மணி நேரத்தில் சுவாமியை தரிசனம் செய்ய தேவஸ்தானம் ஏற்பாடு

By: vaithegi Thu, 28 July 2022 12:54:12 PM

திருப்பதியில் தற்போது 3 மணி நேரத்தில் சுவாமியை தரிசனம் செய்ய தேவஸ்தானம் ஏற்பாடு

திருப்பதி: ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் தற்போது முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு மாதம் 20ம் தேதி கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பக்தர்கள் ரூ.300 செலுத்தி டிக்கெட் பெற்று வருகின்றனர்.

அதே மாதிரி தங்கும் அறைகளும் முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கத்தால் பக்தர்கள் பெருமளவு தரிசனம் செய்ய வரவில்லை, தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் மக்கள் படையெடுத்து சுவாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர்.

கடந்த ஏப்ரல், மே மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. நாள் ஒன்றிற்கு 80,000 முதல் 90,000 வரை பக்தர்கள் வருகை தந்தனர். அதிகரித்த பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தானமும், காவல்துறையும் மிகவும் திணறியது.

tirupati,darshanam,devasthanam ,திருப்பதி,தரிசனம் ,தேவஸ்தானம்

மேலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது. அதே நேரம் கோயில் உண்டியலில் வருவாயும் அதிகரித்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் திருப்பதியில் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.

தற்போது 60,000 முதல் 70,000 வரை மட்டுமே பக்தர்கள் வருகை புரிகின்றனர். அதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் 3 முதல் 4 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்து கொண்டு வருகின்றனர். விரைவாக தரிசனம் செய்வதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நேற்று மட்டும் திருப்பதி உண்டியலில் ரூ.4.60 கோடி காணிக்கை வசூலாகியுள்ளது.

மேலும், வரும் செப்டம்பர் 27ஆம் தேதி திருப்பதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அதிக அளவிலான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :