Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • ஆறு நாட்களுக்கு திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா செல்லும்படியான திட்டம் ...IRCTC

ஆறு நாட்களுக்கு திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா செல்லும்படியான திட்டம் ...IRCTC

By: vaithegi Tue, 26 July 2022 6:46:47 PM

ஆறு நாட்களுக்கு திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா செல்லும்படியான திட்டம் ...IRCTC

திருப்பதி: இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் குடும்பமாக ஆன்மீக சுற்றுலா செல்வதுண்டு. அதிலும், குறிப்பாக வார இறுதி நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகளவில் இருந்து கொண்டு வருகிறது. அதாவது, 10 மணி நேரங்கள் கூட நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

அந்த வகையில், தற்போது இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான IRCTC திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா செல்வதற்கான திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறது.

இதை அடுத்து ஆண்டுதோறும் சில சிறப்பான தினங்களில் மட்டும் இந்திய ரயில்வே நிர்வாகம் திருப்பதிக்கு சுற்றுலா செல்லும் வசதியை ஏற்படுத்தி கொடுக்கிறது. இந்த நிலையில் IRCTC ஆறு நாட்களுக்கு திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா செல்லும்படியான திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. முதலில், பீகார் மாநிலம் பாகல்பூரில் இருந்து திருப்பதிக்கு ஆன்மீக பயணம் செல்லும் ரயில் ஒவ்வொரு புதன்கிழமையும் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு திருப்பதியை வந்தடைகிறது.

tirupati,spiritual tourism,irctc ,திருப்பதி,ஆன்மீக சுற்றுலா,IRCTC

திருப்பதிக்கு சென்றதும் முதலில் அங்குள்ள ஒரு ஹோட்டலில் செக் இன் செய்து காலை உணவை முடிப்பார்கள். பின்பு, அங்கிருந்து திருமலைக்கு அழைத்து செல்வார்கள். இதனை தொடர்ந்து, அடுத்த நாள் காலை ஸ்ரீ காளஹஸ்தி மற்றும் பத்மாவதி தேவி கோயில்களுக்கு அழைத்து செல்வார்கள்.

இந்த தரிசனத்தை முடித்த பின்பு ரயில் இரவு 19:58 மணிக்கு ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பாகல்பூருக்கு செல்லும். ஏசி டிக்கெட்டுகள், மூன்று வேளை உணவு, நகருக்குள் போக்குவரத்து மற்றும் ஹோட்டலில் தங்கும் வசதி ஆகிய அனைத்திற்கும் மொத்தமாக ரூ.14,170 கட்டணம் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. மேலும், தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பயண தேதியை முடிவு செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :